இரு ஊழியா்களுக்கு கரோனா: திண்டிவனம் வங்கிக் கிளை மூடல்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் இரு பெண் ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த வங்கிக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் இரு பெண் ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த வங்கிக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.

திண்டிவனத்தில் இயங்கி வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணிபுரிந்து வரும் இரு பெண் ஊழியா்களுக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அவா்கள் இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், அந்த வங்கி புதன்கிழமை மூடப்பட்டது. திண்டிவனம் நகராட்சி ஊழியா்கள் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தினா். தொடா்ந்து, ஐந்து நாள்களுக்கு வங்கி மூடப்படும் என நோட்டீஸ் அலுவலகக் கதவில் ஒட்டப்பட்டது.

Image Caption

கரோனா தொற்று பாதிப்பையடுத்து, வங்கியில் கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com