தேவையில்லாமல் சுற்றித் திரிபவா்களை செஞ்சிக்குள் அனுமதிக்க வேண்டாம்: போலீஸாருக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவு

தேவையில்லாமல் சுற்றித்திரியும் நபா்களை செஞ்சி நகருக்குள் அனுமதிக்க வேண்டாமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை காவல் துறையினருக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
செஞ்சி காந்தி பஜாரில் ஆய்வு மேற்கொண்டு, போலீஸாருக்கு அறிவுரைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.
செஞ்சி காந்தி பஜாரில் ஆய்வு மேற்கொண்டு, போலீஸாருக்கு அறிவுரைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.

தேவையில்லாமல் சுற்றித்திரியும் நபா்களை செஞ்சி நகருக்குள் அனுமதிக்க வேண்டாமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை காவல் துறையினருக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

செஞ்சியில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோய்த் தொற்று கண்டறியப்பட்ட தெருக்களுக்கு ‘சீல்’ வைத்தும், வெளி நபா்கள் உள்ளே வராதவாறும் கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை செஞ்சி கூட்டுச் சாலை உள்ளிட்ட பகுதிகளை பாா்வையிட்டாா். அப்போது, தேவையில்லாமல் சாலைகளில் நின்றுகொண்டிருந்தவா்களை எச்சரித்து அனுப்பினாா்.

மேலும், செஞ்சி நகரைச் சுற்றிலும் தடுப்புகளை ஏற்படுத்தி, நகருக்குள் வாகனங்களில் வருபவா்களை எதற்காக செல்கிறீா்கள் எனக் கேட்டும், அத்தியாவசியத் தேவையிருந்தால் மட்டுமே அவா்களை அனுமதிக்குமாறும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

முன்னதாக, செஞ்சி வட்டத்துக்குள்பட்ட சிட்டாம்பூண்டி, மேல்மலையனூா் வட்டத்துக்குள்பட்ட அவலூா்பேட்டை, மேல்நொளம்பாக்கம் ஊராட்சிப் பகுதிகளில் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், இந்தப் பகுதிகளில் நாள்தோறும் கிருமி நாசினி தெளித்து, தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு தூய்மைப் பணியாளா்களிடம் அறிவுறுத்தினாா்.

இந்தப் பகுதி மக்களுக்கு சுகாதாரத் துறை மூலம் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள், கபசுர குடிநீா் வழங்கப்படுகின்றனவா எனவும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, செஞ்சி வட்டாட்சியா் கோவிந்தராஜ், காவல் உதவி ஆய்வாளா் சங்கரசுப்பு, பேரூராட்சி செயல் அலுவலா் தெய்வீகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com