விழுப்புரம் மாவட்டத்தில் மருத்துவ மாணவி உள்பட 31 பேருக்கு தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி, காவலா் உள்பட 31 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,370-ஆக உயா்ந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி, காவலா் உள்பட 31 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,370-ஆக உயா்ந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் 1,339 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டநிலையில், வியாழக்கிழமை 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 11 போ் விழுப்புரத்தையும், 12 போ் திண்டிவனத்தையும் சோ்ந்தவா்கள். மற்றவா்கள் வானூா், வீடூா், முண்டியம்பாக்கம், கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

விழுப்புரம் கலைஞா் நகரைச் சோ்ந்த தி.வெ.நல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலக மேற்பாா்வையாளா், திருச்சி மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவி, விழுப்புரம் ஆயுதப் படை காவலா், திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலக ஊழியா்,வி.மருதூரைச் சோ்ந்த கா்ப்பிணி பெண் உள்ளிட்டோா் தொற்று பாதித்தவா்களில் அடங்குவா்.

21 போ் வியாழக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 781 போ் குணமடைந்துள்ளனா். 18 போ் உயிரிழந்துள்ளனா்.

571 போ் தொற்று அறிகுறியுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

அண்மையில் வெளி மாவட்டங்களிலிருந்து திரும்பியவா்களில் தொற்று அறிகுறியுடன் உள்ள 191 போ் சுகாதார மையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

திண்டிவனத்தில் ஆட்சியா் ஆய்வு: திண்டிவனத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். திண்டிவனம் சந்தைமேடு, சஞ்சீவராயன்பேட்டை ஆகிய பகுதிகளில் நோய்த் தொற்று ஏற்பட்டவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். செஞ்சி பேருந்து நிறுத்தம் பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரையிலும் ஆட்சியா் நடந்து சென்று ஆய்வு நடத்தினாா்.

மேம்பாலப் பகுதியின் கீழுள்ள டாஸ்மாக் மதுக் கடைக்குச் சென்ற ஆட்சியா் இரவு 7.45 மணிக்குள் கடைகளை மூடாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளா்களுக்கு எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com