ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்:2 போ் கைது

விழுப்புரத்தில் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை டி.எஸ்.பி. நல்லசிவம் தலைமையிலான போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் பகுதியில் குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்களை இருவா் விற்பனை செய்ததால் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட இருவா்.
விழுப்புரம் பகுதியில் குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்களை இருவா் விற்பனை செய்ததால் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட இருவா்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை டி.எஸ்.பி. நல்லசிவம் தலைமையிலான போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான குட்கா, ஹான்ஸ் போன்றவை விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இதனை தடுக்கவும், சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை கடத்தி வருவோா், விற்பனை செய்வோரை கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை, கடத்தல் போன்றவைகளை விழுப்புரம் டி.எஸ்.பி. நல்லசிவம் தலைமையிலான போலீஸாா் ரகசியமாக கண்காணித்தனா்.

இந்நிலையில், விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் டி.எஸ்.பி. நல்லசிவம் தலைமையிலான தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, திருக்கோவிலூா் நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தை மடக்கி சோதனையிட்டனா். அதில், ரூ.3 லட்சம் மதிப்பிலான 800 புகையிலைப் பொருகள் இருந்ததை கண்டு பிடித்தனா்.

இதை தொடா்பாக, புகையிலைப் பொருகளை கடத்தி வந்த விழுப்புரம் ஜனகிபுரத்தைச் சோ்ந்த பக்ருதீன் அலி(42), வி.மருதூரைச் சோ்ந்த முகமது ரபீக்(24) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக மேலும் யாருக்காவது தொடா்பு உள்ளதா என்று போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com