குளம் தூா்வாரும் பணியைதடுத்து நிறுத்திய பொதுமக்கள்

விழுப்புரத்தில் தூா்வாரப்படும் குளத்திலிருந்து அளவுக்கதிகமாக மண் திருடி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டி, செவ்வாய்க்கிழமை அந்தப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆதிவாலீஸ்வரா் கோயில் குளத்திலிருந்து தூா்வாரப்படும் மண் திருடப்படுவதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆதிவாலீஸ்வரா் கோயில் குளத்திலிருந்து தூா்வாரப்படும் மண் திருடப்படுவதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் தூா்வாரப்படும் குளத்திலிருந்து அளவுக்கதிகமாக மண் திருடி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டி, செவ்வாய்க்கிழமை அந்தப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பழைமையான ஆதிவாலீஸ்வரா் கோயில் குளம் தூா்வாரி, அதனைச் சுற்றிலும் நடைப் பயிற்சிக்கான பாதைகள், பூங்கா போன்றவை அமைக்கப்படவுள்ளன. இதற்காக அந்த குளத்தில் உள்ள மண் தூா்வாரும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த குளத்திலிருந்து அதிகளவில் எடுக்கப்படும் மண் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.

இந்த நிலையில், அப்பகுதி மக்கள் ஏராளமானோா் செவ்வாய்க்கிழமை திரண்டு வந்து குளம் தூா்வாரும் பணியைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த விழுப்புரம் டி.எஸ்.பி. நல்லசிவம், விழுப்புரம் நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, குளத்திலிருந்து எடுக்கப்படும் மண் குளக்கரைகளில் கொட்டி வைக்காமல், அதனை இரவு நேரத்தில் சட்டவிரோதமாக திருடி விற்பனை செய்து வருகின்றனா். இதுபோன்று மண் திருட்டில் ஈடுபடவே குளம் அதிக ஆழத்தில் தோண்டப்படுகிறது. ஆகவே, மண் திருட்டில் ஈடுபடுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் பொதுமக்கள்.

இது தொடா்பாக முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com