11 மாவட்டங்களில்மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூலை 22) மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
11 மாவட்டங்களில்மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூலை 22) மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை, தருமபுரி, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூா், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூலை 22) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும் என்றாா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: கேரள கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கா்நாடக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 24-ஆம் தேதி வரையும், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு ஜூலை 23-ஆம் தேதி வரையும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com