விழுப்புரத்தில் மளிகைக் கடைக்கு ‘சீல்’

விழுப்புரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத மளிகைக் கடைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
விழுப்புரத்தில் மளிகைக் கடைக்கு ‘சீல்’

விழுப்புரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத மளிகைக் கடைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

விழுப்புரம் டி.எஸ்.பி. நல்லசிவம் புதன்கிழமை பழைய பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து சென்றாா். அப்போது, பேருந்து நிலையம் எதிரே நேருஜி சாலையில் உள்ள மளிகை மொத்த விற்பனைக் கடையில் பொதுமக்கள் அதிகளவில் கூடி பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தனா். சமூக இடைவெளியை உறுதி செய்யாமல், கரோனா பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் விற்பனையில் ஈடுபட்டதாக அந்த மளிகைக் கடைக்கு ‘சீல்’ வைக்க டி.எஸ்.பி. நல்லசிவம் உத்தரவிட்டாா். இதையடுத்து, அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் ஏராளமானோா் இரவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். தகவல் அறிந்த டி.எஸ்.பி. நல்லசிவம் நேரில் சென்று அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com