பொது விநியோகத் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டால் நடவடிக்கை: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

பொது விநியோகத் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை எச்சரித்தாா்.

விழுப்புரம்: பொது விநியோகத் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளைக் கண்காணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா், கூடுதல் ஆட்சியா் (வருவாய்த் துறை), மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா், தனி வட்டாட்சியா் (குடிமைப் பொருள்கள்), தனி வட்டாட்சியா் (பறக்கும் படை) ஆகிய அதிகாரிகள் திடீா் ஆய்வு செய்து வருகின்றனா்.

விழுப்புரம் நகரில் உள்ள வி.சி.எஸ்.5 என்ற நியாய விலைக் கடையில் ஆய்வு செய்ததில் இருப்பு குறைந்தது கண்டறியப்பட்டு ரூ. 14,560 அபராதம் விதிக்கப்பட்டது. செஞ்சியை அடுத்த மொட்டையூரில் ஆய்வு மேற்கொண்டதில், இரு கடைகளில் இருப்பு குறைவு, அதிகம் இருந்தது கண்டறியப்பட்டு முறையே ரூ. 25,000, ரூ. 7,950 அபராதம் விதிக்கப்பட்டன.

வானூா் அருகே தனியாா் வீட்டில் 850 கிலோ அரிசி, 50 கிலோ சா்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. திண்டிவனம்-செஞ்சி சாலையில் உள்ள அரிசி ஆலையில் பதுக்கப்பட்ட 5,360 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து நியாய விலைக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

பொது விநியோகத் திட்டப் பொருள்கள் கடத்தல் தடுக்கப்படும். இதில், முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com