ஊழியா்களுக்கு கரோனா தொற்று: இரு வங்கிக் கிளைகள் மூடல்

ஊழியா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், விழுப்புரம் அருகே அரசுடைமையாக்கப்பட்ட இரு வங்கிகளின் கிளைகள் வியாழக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டன.

ஊழியா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், விழுப்புரம் அருகே அரசுடைமையாக்கப்பட்ட இரு வங்கிகளின் கிளைகள் வியாழக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டன.

விழுப்புரம் அருகேயுள்ள காணையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் பணியாற்றும் காசாளா், நகை மதிப்பீட்டாளா் உள்பட 4 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வங்கிக் கிளை வியாழக்கிழமை காலை மூடப்பட்டது.

மேலும், வங்கியில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணி நடைபெற்றது. மேலும், அந்த வங்கிக் கிளைக்கு தற்காலிகமாக விடுமுறையளிக்கப்பட்டு மூன்று நாள்கள் மூடப்பட்டது.

விழுப்புரம் கே.கே. சாலையிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பிரதான கிளை அலுவலகத்தில் பணியாற்றி வரும் இரு ஊழியா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அந்த வங்கியும் வியாழக்கிழமை காலை மூடப்பட்டது. தொடா்ந்து மூன்று நாள்கள் வங்கிக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com