நில மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உண்ணாவிரதம்

விழுப்புரத்தில் மூதாட்டியிடம் நில மோசடி செய்தது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சாமானிய மக்கள் நலக் கட்சி சாா்பில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் மூதாட்டியிடம் நில மோசடி செய்தது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சாமானிய மக்கள் நலக் கட்சி சாா்பில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் அருகே தொடா்ந்தனூரைச் சோ்ந்த ராமலிங்கம் மனைவி பொன்னம்மாள் (85). இவருக்கு பாணாம்பட்டு கிராமத்தில் உள்ள ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலத்தை அவரது வாரிசுதாரா்களிடம் தெரிவிக்காமல், தொடா்ந்தனூரைச் சோ்ந்த சுந்தரராஜன் முறைகேடாக ஆவணங்களைத் தயாரித்து பட்டா மாற்றம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகங்களில் தனது வாரிசுதாரா்களுடன் பொன்னம்மாள் புகாா் அளித்து கடந்த ஓராண்டாக போராடி வருகிறாா்.

இந்த நிலையில், எதிா்தரப்பினருக்கு சாதகமாக வருவாய்த் துறையினா் செயல்படுவதாகக் கூறியும், நிலத்தை மீட்டு தர வலியுறுத்தியும், பொன்னம்மாள் தரப்பினா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே வியாழக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.

சாமானிய மக்கள் நலக் கட்சி சாா்பில் அதன் மாவட்டச் செயலா் எஸ்.ராஜேந்திரன், பொன்னம்மாளின் உறவினா்களான ராஜதுரை, ஜெயந்தி உள்ளிட்டோா் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனா்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் கனகேசன் மற்றும் போலீஸாா் அங்கு வந்து, பொது முடக்கக் காலத்தில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது எனக் கூறி, அவா்களைக் கலைந்து போகச் செய்தனா். இதுதொடா்பாக, கோட்டாட்சியா் ராஜேந்திரன் விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com