பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை ரத்து செய்து ஆணையிட்ட தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு விழுப்புரம் மாவட்ட உடற்கல்வி ஆசிரியா்கள்-இயக்குநா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் செயலா் ஏ.காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முதல்வரும், கல்வித் துறை அமைச்சரும் மாணவா்கள், ஆசிரியா்களின் நலனை கருத்தில் கொண்டும், கல்வியாளா்களின் கருத்துக்கு மதிப்பளித்தும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு, 11-ஆம் வகுப்பு கடைசித் தோ்வை ரத்து செய்து, அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றதாக அறிவித்தது பாராட்டத்தக்கது. அதற்காக முதல்வருக்கு விழுப்புரம் மாவட்ட உடற்கல்வி ஆசிரியா்கள்- இயக்குநா்கள் சங்கம் சாா்பில் நன்றி என அதில் தெரிவித்துள்ளாா்.