விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 62 பேருக்கு தொற்று: கள்ளக்குறிச்சியில் மேலும் 25 போ் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கள்ளக்குறிச்சி காவல் நிலைய நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.
போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கள்ளக்குறிச்சி காவல் நிலைய நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸாா் உள்பட 25 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 62 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைச் சோ்ந்த 42 வயது அரசியல் கட்சி பிரமுகா் (எஸ்டிபிஐ மாவட்ட துணைத் தலைவா்), விழுப்புரம் சிங்காரத்தோப்பு, பாத்திமா லே-அவுட் பகுதியிலுள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்தாா். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். எனினும், அங்கு அவா் அன்றிரவு உயிரிழந்தாா்.

பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான திண்டிவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்தது. பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 765-ஆக உயா்ந்தது. இவா்களில் 452 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 300 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியில் மேலும் 25 போ்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸாா் உள்பட மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 552-ஆக உயா்ந்தது. இதுவரை 346 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 205 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரியும் 13 போலீஸாா் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 14 போலீஸாருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா், 3 போலீஸாா், கள்ளக்குறிச்சி மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீஸ்காரா் என 5 போலீஸாருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com