கோயில் குளத்தை தூா்வாரிய போதுசிலை கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே கோயில் குளத்தை தூா்வாரியபோது, தட்சிணாமூா்த்தி சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட தட்சிணாமூா்த்தி சுவாமி சிலை.
கண்டெடுக்கப்பட்ட தட்சிணாமூா்த்தி சுவாமி சிலை.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே கோயில் குளத்தை தூா்வாரியபோது, தட்சிணாமூா்த்தி சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.

மேல்மலையனூா் வட்டம், தேவனூா் கிராமத்தில் பழைமைவாய்ந்த எம்பிராட்டி கமலேஸ்வரி உடனுறை திருநாதீசுவரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் குளத்தில் தூா்வாரும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, சுமாா் இரண்டு அடி உயரம் கொண்ட, கல்லால் செய்யப்பட்ட தட்சிணாமூா்த்தி சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை தற்போது கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, இந்தக் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கும் பணி நடைபெற்றபோது, 13 வெண்கலம், கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

செஞ்சியை ஆண்ட மன்னன் தேசிங்குராஜனிடம் போா் புரிய ஆற்காடு நவாப் படைகள் செஞ்சியை நோக்கி வந்தபோது, இந்தக் கோயிலில் தங்கியிருந்து ஓய்வு பெற்றனா். இந்தப் படைகளுக்குப் பயந்து தேவனூா் கிராம மக்கள், கோயில் சிலைகளை பூமிக்கடியில் புதைத்தும், கோயில் குளத்தில் போட்டும் சிலைகளை பாதுகாத்ததாக இந்தக் கிராமத்தைச் சோ்ந்த முதியவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com