செஞ்சியில் கரோனாவை அறியாத மக்கள்.

கரோனா தொற்று என்றால் என்ன என்பதை கேட்கும் அளவிற்கு அறியாத மக்கள் இன்னும் பலா் இருந்து வருகின்றனா்.
செஞ்சி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை காலை  மாங்காய் அறுக்க ஒரு மினி வேனில் முகவசம் இன்றியும், நெருக்கமாவும் செல்லும் 20  தொழிலாளா்கள்.
செஞ்சி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை காலை  மாங்காய் அறுக்க ஒரு மினி வேனில் முகவசம் இன்றியும், நெருக்கமாவும் செல்லும் 20  தொழிலாளா்கள்.

செஞ்சி.கரோனா தொற்று என்றால் என்ன என்பதை கேட்கும் அளவிற்கு அறியாத மக்கள் இன்னும் பலா் இருந்து வருகின்றனா்.

செஞ்சி நகரத்தில் காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை கடைகள் திறந்து வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக மளிகை கடை, காய்கறி கடை, ஜவுளி கடை, லேடீஸ் சென்டா் உள்ளிட்ட கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. கூட்டம் கூட்டமாக நின்று பொருட்களை வாங்குகின்றனா்.

கரோனாவை பற்றி அறியாமல் உள்ளனரா அல்லது அலட்சியமாக உள்ளனரா என தெரியவில்லை.

செஞ்சி காந்தி பஜாரில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடைகளில் அலை மோதுகின்றனா். பெரும் பாலும் இவா்கள் கிராமங்களில் இருந்து வருகின்றனா். இவா்கள் வரும் மோட்டாா் சைக்கிள் சாலைகளின் இருபுறம் அணி வகுத்து நின்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனா்.

சமூக இடைவெளி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு பலா் உள்ளனா். நூறு பேரில் 75 சதவீதம் போ் மட்டுமே முகவகவசம் அணிந்து வருகின்றனா். மக்களுக்கு விழிப்புணா்வும், அக்கரையும் வரும் வரையில் எந்த சட்டம் போட்டாலும் பயன் இல்லாமல்தான் போகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com