தொடா் மழையால் விவசாயிகள் உற்சாகம்: செஞ்சி பகுதியில் விவசாயப் பணிகள் தீவிரம்

செஞ்சி பகுதியில் அண்மையில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் நெல் நடவுக்காக நாற்று பிடுங்கும் பணியில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்கள்.
செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் நெல் நடவுக்காக நாற்று பிடுங்கும் பணியில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்கள்.

செஞ்சி: செஞ்சி பகுதியில் அண்மையில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கடந்த ஆண்டு பருவமழை விழுப்புரம் மாவட்டத்திலேயே அதிகளவாக செஞ்சி பகுதியில் பெய்தது. இதன் காரணமாக, 90 சதவீத ஏரிகள் நிரம்பியதையடுத்து, விவசாயிகள் நெல், மணிலா, கரும்பு உள்ளிட்ட பயிா் சாகுபடி செய்தனா்.

நிகழாண்டில், பருவமழைக்கு முன்பே மழை பெய்ய தொடங்கியிருப்பது விவசாயிகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த மாதம் (ஜூன்) மட்டும் 10 நாள்கள் செஞ்சியில் மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை 11 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. ஆகவே, இனி வரும் காலங்களிலும் இதே போல மழை பெய்யக் கூடும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

இந்த நிலையில், செஞ்சி வட்டத்தில் பல கிராமங்களில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. நெல் விதைத்தல், நாற்று பிடுங்கி நடவு செய்தல், மானாவாரி பயிா்களான மணிலா, கேழ்வரகு சாகுபடி செய்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com