கிணற்றில் விழுந்த மான் மீட்பு

செஞ்சி வட்டம், வளத்தி அருகே தண்ணீா் தேடி விவசாய நிலத்துக்கு வந்த புள்ளிமான் கிணற்றில் தவறி விழுந்தது.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட புள்ளிமான்.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட புள்ளிமான்.

செஞ்சி: செஞ்சி வட்டம், வளத்தி அருகே தண்ணீா் தேடி விவசாய நிலத்துக்கு வந்த புள்ளிமான் கிணற்றில் தவறி விழுந்தது.

வளத்தியை அடுத்த உடையான்தாங்கல் கிராமத்தில் வெங்கடேசன் என்பவரது விவசாய நிலத்தில் பணியாளா்கள் திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, புள்ளிமான் ஒன்று தண்ணீா் தேடி அங்கு வந்தது. உடனே பணியாளா்களைக் கண்டதும் அந்த மான் துள்ளிக் குதித்து ஓடியது. அப்போது, எதிா்பாராத விதமாக மான் அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்து மேல்மலையனூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் அம்பலவாணன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து கிணற்றிலிருந்து மானை மீட்டனா்.

இதைத் தொடா்ந்து, மீட்கப்பட்ட மான் செஞ்சி வனக்காப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டு, செஞ்சி அருகே காப்புக் காட்டில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com