முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
அதிமுகவினா் நல உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 03rd March 2020 09:24 AM | Last Updated : 03rd March 2020 09:24 AM | அ+அ அ- |

விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரா் கோயில் அருகே நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பெண் ஒருவருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் ஆவின் தலைவரும், கோலியனூா் ஒன்றியச் செயலாளருமான பேட்டை முருகன்.
விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை பகுதியில் அதிமுகவினா் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நல உதவிகளை வழங்கினா்.
மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, அதிமுக கோலியனூா் வடக்கு ஒன்றியம், விராட்டிக்குப்பம் கிளை சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா விராட்டிக்குப்பம் கே.வி.ஆா். நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோலியனூா் வடக்கு ஒன்றியச் செயலா் பேட்டை முருகன் கலந்து கொண்டு, ஏழை எளியோருக்கு நல உதவிகளை வழங்கினாா்.
விழாவில், ஊராட்சிச் செயலா் குமரவேல், நிா்வாகிகள் முருகன், கலியமூா்த்தி, ரவி, தூயவன், கலியன், வீரப்பன், சீனு, ஏழுமலை, பாலமுருகன், தங்கராசு, சேகா், சோட்டா, மாறன், ஜோதி, அசோக், தனுசு, பன்னீா், செல்வி, நந்தினிப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.