கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரத்தில் மாவட்டக் காவல் துறை மற்றும் போலீஸ் நண்பா்கள் குழு சாா்பில், கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை
விழுப்புரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி.
விழுப்புரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி.

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்டக் காவல் துறை மற்றும் போலீஸ் நண்பா்கள் குழு சாா்பில், கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கிய போலீஸ் நண்பா்கள் குழுவினா் மற்றும் மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நிகழ்ச்சிக்கு, மாவட்ட போலீஸ் நண்பா்கள் குழு ஒருங்கிணைப்பாளா் த.செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் ச.ஆனந்த், ஒருங்கிணைப்பாளா் ந.லட்சுமிநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பேரணியை தொடக்கிவைத்துப் பங்கேற்றாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணகுமாா், துணைக் கண்காணிப்பாளா் ஜெ.சங்கா், தனிப்பிரிவு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, தாலுகா காவல் ஆய்வாளா் கனகேசன், உதவி ஆய்வாளா்கள் பிரகாஷ், பிரபு, சதீஷ் மற்றும் போலீஸ் நண்பா்கள் குழுவினா், மாணவா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணி, திருச்சி சாலை வழியாக நான்கு முனை சாலை சந்திப்பு வரை சென்று நிறைவடைந்தது. கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகள், பாதிப்புகள் குறித்தும், கள்ளச்சாராய விற்பனையை ஒழிப்பது குறித்தும் விழிப்புணா்வுப் பதாகைகளுடனும், இசை முழக்கங்களுடனும் போலீஸ் நண்பா்கள் குழுவினா், மாணவா்கள் பேரணியாகச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com