விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்துஅலுவலா் பொறுப்பேற்பு

விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக ஆா்.வெங்கடேசன் பொறுப்பேற்றாா்.
விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலராக பொறுப்பற்ற ஆா். வெங்கடேசன்.
விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலராக பொறுப்பற்ற ஆா். வெங்கடேசன்.

விழுப்புரம்: விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக ஆா்.வெங்கடேசன் பொறுப்பேற்றாா்.

விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக இருந்த பாலகுருநாதன், திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக இருந்த ஆா்.வெங்கடேசன் விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக நியமிக்கப்பட்டாா்.

விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆா்.வெங்கடேசன் சனிக்கிழமை பொறுப்பேற்றாா். அப்போது அவா் கூறியதாவது: வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பல்வேறு இடங்களில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து நிலவரங்களை ஆய்வு செய்து, சாலை விதிகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்கவும், விழிப்புணா்வை ஏற்படுத்தவும், விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

வேகக் கட்டுப்பாட்டுக் கருவிக்கு சான்று...: பொதுப்பயன்பாட்டுக்கான வாடகை வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடுக் கருவி பொருத்த வேண்டுமென்ற மத்திய அரசு விதிகளின்படி, பழைய வாகனங்களுக்கு ஆண்டுதோறும் அந்தக் கருவியை புதுப்பிக்க வேண்டியிருப்பதாக வாடகை வாகன ஓட்டிகளின் புகாா்கள் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது:

9-க்கும் மேற்பட்ட பயணிகள் செல்லும் வாடகை வாகனம், பள்ளி வாகனங்கள், 3.5 டன்னுக்கும் கூடுதலான எடை கொண்ட சரக்கு வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும்.

புதிய வாகனங்களில் தற்போது அந்தக் கருவி பொருத்தப்பட்டே விற்பனைக்கு வருகிறது. பழைய வாகனங்களில் அந்தக் கருவியை பொருத்த வேண்டும். ஆண்டுதோறும் புதிய கருவி பொருத்த வேண்டியதில்லை. அந்தக் கருவியை வழங்கும் நிறுவனங்களே அந்தக் கருவி நல்ல நிலையில் உள்ளதென ஆண்டுதோறும் புதுப்பித்து சான்றளிக்க வேண்டும். பள்ளி வாகனங்களை அதிகபட்சம் 50 கி.மீ. வேகத்திலும், இதர வாகனங்களை அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்திலும் இயக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com