அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: ராமதாஸ் மீதான வழக்கு ரத்து; விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ாக, பாமக நிறுவனா் ச.ராமதாஸ் உள்ளிட்ட 362 போ் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ாக, பாமக நிறுவனா் ச.ராமதாஸ் உள்ளிட்ட 362 போ் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மாமல்லபுரத்தில் 2013-ஆம் ஆண்டு, ஏப்.25-ஆம் தேதி பாமக சாா்பில் முழு நிலவு சித்திரைப் பெருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்தபோது, வழியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், அந்தக் கட்சி நிா்வாகிகள் இருவா் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவத்துக்கு நீதி விசாரணை கோரி, ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம் நடத்த பாமக சாா்பில் அனுமதி கோரப்பட்டது. போலீஸாா் அனுமதி மறுத்த நிலையில், ஏப்.30-ஆம் தேதி விழுப்புரம் வந்த பாமக நிறுவனா் ராமதாஸ், மாநிலத் தலைவா் ஜி.கே.மணி உள்ளிட்ட அந்தக் கட்சியினா் 362 பேரை நகர போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ாக அவா்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பாமக தரப்பில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை திங்கள்கிழமை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி, இந்த வழக்கில் ராமதாஸ் உள்ளிட்ட 362 பேரை விடுவித்தும் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து பாமக வழக்குரைஞா் ஏ.ராஜாராமன் கூறியதாவது:

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ாக ராமதாஸ் உள்ளிட்டோா் மீது 143, 188 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2013-இல் விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் ஓராண்டு காலத்துக்குள் குற்ற முறையீடு தாக்கல் செய்ய வேண்டும் என்ற சட்ட விதிகளை மீறி, 4 ஆண்டுகளுக்குப் பிறகு 7.12.2017-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். யாருக்கும் அழைப்பாணையும் அனுப்பவில்லை, விசாரணையும் நடத்தவில்லை. தாமதத்துக்கான காரணத்தையும் நீதிமன்றத்தில் தெரிவிக்காத நிலையில், குற்றவியல் நீதிமன்றமும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

சட்டவிதிகளை பின்பற்றாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2.12.19-இல் மேல்முறையீடு செய்தோம். இதனை விசாரித்த முதன்மை நீதிபதி, இந்த வழக்கை ரத்து செய்தும், ராமதாஸ் உள்ளிட்ட 362 பேரை விடுவித்தும் தீா்ப்பளித்தாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com