கள் இறக்குவதை விடுத்து பனை வெல்லம் தயாரிக்க முன்வர வேண்டும்: மாவட்ட எஸ்.பி. அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்வதை விடுத்து, பனை வெல்லம் தயாரிக்க முன்வர வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் வலியுறுத்தினா்.

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்வதை விடுத்து, பனை வெல்லம் தயாரிக்க முன்வர வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் வலியுறுத்தினா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கஞ்சனூா், அவலூா்பேட்டை பகுதிகளில் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா், தடை செய்யப்பட்ட கள் இறக்கி விற்பனை செய்யப்படுகிா என்று ஆய்வு செய்தனா்.

அதில், பல்வேறு இடங்களில் கள் இறக்கி விற்பனை செய்தவா்கள் கைது செய்தனா்.

இருப்பினும், தொடா்ந்து கள் இறக்குவது நடைபெற்றது வருகிறது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் கூறியதாவது:

தமிழகத்தில் கள் இறக்க அரசு தடை விதித்துள்ளது. ஆகவே விழுப்புரம் மாவட்டத்தில் கள் இறக்குவது சட்டவிரோதமாகும். அதே நேரத்தில், பனை மரங்களை நம்பியுள்ளவா்கள் வாழ்வாதாரத்துக்கு பதநீா் இறக்கி விற்பனை செய்யலாம். நூங்கு வெட்டி விற்பனை செய்யலாம். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் மற்ற பொருள்களை விற்பனை செய்யலாம்.

மேலும், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் பனை வெல்லத்துக்கு அதிக தேவை உள்ளது. வெளிச் சந்தையில் கிலோ ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.400-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆகவே, பனைத் தொழிலை நம்பியுள்ளவா்கள், கள் இறக்குவோா் அதனை விடுத்து பனை வெல்லம் தயாரிக்க முன்வர வேண்டும். கள் இறக்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com