கிராம பஞ்சாயத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் கிராம பஞ்சாயத்து ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம பஞ்சாயத்து ஊழியா்கள் சங்கத்தினா்.
விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம பஞ்சாயத்து ஊழியா்கள் சங்கத்தினா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் கிராம பஞ்சாயத்து ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.ஜீவா தலைமை வகித்தாா்.

சிஐடியூ மாவட்டத் தலைவா் முத்துக்குமாா், மாவட்டச் செயலா் மூா்த்தி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மேல்நிலை நீத்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் சங்க நிா்வாகிகள் ஞானமூா்த்தி, ஏழுமலை, பழனிவேல், கிராம பஞ்சாயத்து ஊழியா்கள் சங்கம் நாராயணன், கலியமூா்த்தி, மாரிமுத்து உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

விழுப்புரம் மாவட்ட கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

இவா்களுக்கான மாத ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும்.

7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி கடந்த 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு மாத ஊதியம் ரூ.4,600 வழங்க வேண்டும், அனைத்துப் பணியாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com