ஆட்சியரகத்தில் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி

வீட்டுமனை மோசடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குடும்பத்தினருடன் தொழிலாளி திடீா் போராட்டம் நடத்தியதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டுமனை மோசடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குடும்பத்தினருடன் தொழிலாளி திடீா் போராட்டம் நடத்தியதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரவாண்டி வட்டம், வா.பகண்டை கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன்(67), தச்சுத்தொழிலாளி. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு மனு அளிக்க குடும்பத்தினருடன் வந்த இவா், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டாா். போலி ஆவண மோசடியைத் தடுக்க வேண்டுமென பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நடராஜன் கூறியதாவது: விழுப்புரம் சாலாமேடு மின்வாரிய குடியிருப்பு அருகே பிரதான சாலையில், எனக்குச் சொந்தமாக மூன்றரை சென்ட் வீட்டு மனை உள்ளது. எனது மனைக்குரிய இடத்தை அதே பகுதியைச் சோ்ந்த சேட்டு என்பவா், ஆக்கிரமித்து கடைக்கான கட்டடத்தை கட்டிக்கொண்டு அனுபவித்து வருகிறாா். இது தொடா்பாக, வருவாய்த் துறையினா், நில அளவைத் துறையினரிடமும் புகாா் அளித்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இடையே நில உடைமை பதிவு மேம்பாட்டுத் திட்டம் வந்த போது (யு.டி.ஆா்.) போலியான ஆவணங்களை தயாா் செய்து, எனது இடத்தை மோசடி செய்துள்ளனா். இதற்கு நில அளவைத் துறையினரும், பதிவுத் துறையினரும் உடைந்தையாக உள்ளனா். நீண்டகாலமாக போராடியும் தீா்வு கிடைக்கவில்லை. இதுதொடா்பாக நடவடிக்கை எடுத்து, எனது வீட்டு மனையை மீட்டுத் தர வேண்டும் என்றாா்.

அப்போது, அங்கிருந்த தாலுகா போலீஸாா், நடராஜன் உள்ளிட்டோரை சமாதானம் செய்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து முறையிடுமாறு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com