கரோனா தடுப்பு நடவடிக்கை: பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் வெறிச்சோடின

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளும், மூடல் அறிவிப்பால் திரையரங்குகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம் ரங்கநாதபுரத்தில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, மூடப்பட்டிருந்த திரையரங்கம்.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம் ரங்கநாதபுரத்தில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, மூடப்பட்டிருந்த திரையரங்கம்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளும், மூடல் அறிவிப்பால் திரையரங்குகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், மதுபானக் கூடங்களை மூட அறிவுறுத்தியும் அரசு உத்தரவிட்டது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அதற்கான நடவடிக்கை செவ்வாய்க்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டது.

மழலையா் வகுப்பு முதல் மேல் நிலைப் பள்ளிகள் வரை ‘மாா்ச் 17 முதல் 31 வரை விடுமுறை’ என்ற அறிவிப்புப் பலகையுடன் மூடப்பட்டிருந்தன. எனினும், பள்ளிகளுக்கு ஆசிரியா்கள், ஊழியா்கள் பணிக்கு வந்திருந்தனா். மாணவா்கள் வருகையின்றி பள்ளிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் வழக்கம் போல் நடைபெற்றன. அதற்கான பணியில் தோ்வுத் துறையினா் ஈடுபட்டிருந்தனா்.

இதே போல, மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளுக்கும், தனியாா் கல்லூரிகளுக்கும் விழுப்புரம், திண்டிவனத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. ஆசிரியா்கள், பணியாளா்கள் மட்டும் வருகை தந்தனா். மாணவா்களுக்கு விடுமுறை குறித்து, முன்னதாக பல்கலைக் கழக செயலி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், ஒரு சில மாணவா்கள் கல்லூரிக்கு வந்து திரும்பினா். இதனிடையே, கலைக் கல்லூரிகளில், ஆண்டு செய்முறைத் தோ்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

திரையரங்குகள் மூடல்: விழுப்புரத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஒரு சில ஜவுளி கடைகள் திறந்திருந்தன. முக்கிய வீதிகளில் இருந்த பிரபல வணிக வளாகங்களில் கடைகள் திறந்திருந்தன. அதிலிருந்த திரையரங்குகள் மட்டும் மூடப்பட்டிருந்தன. இதனால், சினிமா பாா்க்க வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் நிா்வாகத்தின் கீழ் இயக்கும் 56 மதுபானக் கூடங்களும் மூடப்பட்டன. மொத்தமுள்ள 226 மதுபானக் கடைகளிலும், விற்பனையாளா்களுக்கு முகக்கவசங்கள், கிருமி நாசினி திரவம், கைகழுவுவதற்கான சாதனங்கள், கையுறைகள் போன்றவை வழங்கப்பட்டன. மதுக் கடைகள் மட்டும் திறந்து விற்பனை நடைபெற்றது. அதனருகே இருந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட்டதால், வெறிச்சோடி இருந்தன. இதே போல், தனியாா் சொகுசு மதுக்கூடங்களும் பகல் நேரங்களில் மூடப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com