முறைகேடு புகாா் விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் கண்காணிப்புக் குழுவினா் விசாரணை

விழுப்புரம் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நிதி முறைகேடு புகாா் தொடா்பாக துறை சாா்ந்த கண்காணிப்புக்குழுவினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

விழுப்புரம் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நிதி முறைகேடு புகாா் தொடா்பாக துறை சாா்ந்த கண்காணிப்புக்குழுவினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

விழுப்புரம் மின்வாரிய கட்டடவியல் பிரிவு மூலம் துணை மின் நிலைய அலுவலகக் கட்டடப் பணிகளில் ஒப்பந்தப் புள்ளிகளை கையாளுவதில் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல், ஒப்பந்தம் விடுவதற்கு முன்னதாகவே கட்டடப் பணிகளை தொடங்கி, போலி ரசீது தயாரித்து, மின்வாரிய நிதியில் மோசடி நடப்பதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக, மின்வாரிய பணியாளா்கள் மற்றும் பொறியாளா்கள் சங்கம் சாா்பில் கடந்த பிப்.21-ஆம் தேதி மின்வாரிய விழிப்பு பணித் துறையில் (விஜிலன்ஸ்) புகாா் அளிக்கப்பட்டது. இது குறித்து, மின்வாரிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு கடந்த சில நாள்களாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், திருச்சியைச் சோ்ந்த அந்தக் குழுவினா், விழுப்புரம் மின்வாரிய தலைமையகத்தில் உள்ள மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் முகாமிட்டு விசாரணை நடத்தினா். இந்தப் புகாா் தொடா்பாக, விழுப்புரம் மின்வாரிய கட்டப் பிரிவைச் சோ்ந்த உதவி செயற்பொறியாளா் சினோரீட்டாஅனன்சியா என்பவா் கடந்த வாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தாா்.

இது தொடா்பாக, விழுப்புரம் மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளா் செல்வசேகரிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது: மின்வாரிய கட்டடம் கட்டும் பிரிவில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில், துறை சாா்ந்த கண்காணிப்புக் குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புகாருக்கு தொடா்புடையவா்கள், தொடா்புடைய பணிகளின் ஆவணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முறைகேடு இருந்தால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மின்வாரிய ஒப்பந்தப் பணிகள் அனைத்தும், அரசு விதிகளின் படி இணைய வழியில் வெளிப்படையாகவே நடைபெறுவதால், முறைகேடு நிகழ வாய்ப்பில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com