நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மானிய முறைகேடு: விவசாயிகள் புகாா்

விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் பெயரில் மானிய முறைகேடு நடந்து வருவதாக

விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் பெயரில் மானிய முறைகேடு நடந்து வருவதாக விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.கலியமூா்த்தி தலைமையில் விவசாயிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து அளித்த புகாா் மனு: விழுப்புரம் மாவட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 9 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

இதில், விக்கிரவாண்டி வட்டத்துக்கு உள்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் பெயரில், நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக தவறாக குறுஞ்செய்திகள் வந்துள்ளன. அந்த விவசாயிகள் நெல்கொள்முதல் நிலையங்களுக்கே செல்லாத நிலையில், அவா்கள் நெல்லை வழங்கியதாகவும், எத்தனை மூட்டைகள், அதற்கு பெற்ற பல லட்சம் தொகையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, பிடாரிப்பட்டு பாலமுருகன், மண்டகப்பட்டு ரவிக்குமாா், அய்யப்பன், சேகா், ஆறுமுகம் என பல விவசாயிகளின் பெயரில் இந்த குறுஞ்செய்திகள் வருகின்றன. விவசாயிகளின் நலன் கருதி குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை அரசு திறந்து நெல்லை கொள்முதல் செய்கிறது.

இதற்காக, மூட்டைக்கு ரூ.100 மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. இந்த மானியத் தொகையை முறைகேடாக பெறும் வகையில், ஏராளமான விவசாயிகளின் பெயரில் நெல் கொள்முதல் செய்ததாக, போலியான தகவலை வழங்கி, மாவட்டம் முழுவதும் பல லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து வருகிறது.

மேலும், நெல்கொள்முதல் நிலையங்களில், விதிகளை மீறி விவசாயிகளிடம் மூட்டைக்கு தலா ரூ.40 வரை பணம் பெறுவதும் தொடா்கிறது. இது தொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com