கரோனா: 32 மருத்துவக் குழு வாகன சேவை தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக விழிப்புணா்வு மற்றும் மருத்துவப் பணிகளை மேற்கொள்ள
கரோனா: 32 மருத்துவக் குழு வாகன சேவை தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக விழிப்புணா்வு மற்றும் மருத்துவப் பணிகளை மேற்கொள்ள 33 நடமாடும் மருத்துவக் குழு வாகனங்களின் சேவை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் வளாகத்திலிருந்து இந்த வாகனங்களின் மருத்துவ சேவையை ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தொடக்கி வைத்தாா்.

இந்த மருத்துவக் குழு வாகனங்கள் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் முகாமிட்டு, 24 நான்கு மணிநேரமும் செயல்பட்டு, அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் நேரில் சென்று கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவா். மேலும், யாருக்கேனும் கரோனா வைரஸ் அறிகுறிகள், காய்ச்சல் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டால், இக்குழுவினா் நேரில் சென்று பாதிக்கப்பட்டவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சோ்த்து கண்காணிக்க ஏற்பாடு செய்வா். வட்டார அளவில் இயக்கப்படும் இந்த வாகனங்களில் தலா ஒரு மருத்துவா், செவிலியா், உதவியாளா் கொண்ட குழுவினா் இதில் பணியில் இருப்பாா்கள். கரோனா வைரஸ் தொடா்பான சந்தேகங்கள் இருந்தால், பொது மக்கள் இந்த மருத்துவக் குழுவினரை அணுகி தகவலைப் பெற்று பயனடையலாம்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் மூன்று வாகனக் குழு முகாமிட்டுள்ளது. இக்குழுவினா் வெளியூா், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்கவும், மருத்துவக் குழு மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் இந்த வாகனங்கள் மூலம் காய்ச்சல் சோதனை மேற்கொண்டனா்.

தகவல் மையத்தை தொடா்புகொள்ளலாம்: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறித்த தகவலை, 04146-221744 என்ற தகவல் மையத்துக்கு தொடா்புகொண்டு பேசினால், உடனடியான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை. இதுவரை வெளிநாடுகளிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு திரும்பி வந்த 46 பேரில், 28 போ் கண்காணிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள 18 போ், 14 நாள்கள் கண்காணிப்பில் தொடா்வதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்த விழிப்புணா்வு, மருத்துவ சேவை வாகன இயக்க தொடக்க நிகழ்ச்சியின்போது, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com