கரோனா: விழுப்புரத்தில் வணிக வளாகங்கள் மூடல்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் சனிக்கிழமை மூடப்பட்டன.
கரோனா பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருக்கும் விழுப்புரம் திருச்சி சாலையிலுள்ள தி சென்னை சில்க்ஸ்.
கரோனா பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருக்கும் விழுப்புரம் திருச்சி சாலையிலுள்ள தி சென்னை சில்க்ஸ்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் சனிக்கிழமை மூடப்பட்டன.

மாவட்டத்தில் கரோனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், திங்கள்கிழமை முதல் திரையரங்குகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டன.

இருப்பினும், வணிக வளாகங்கள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், மளிகைக் கடைகள் வழக்கம் போல இயங்கின.

இந்த நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில், விழுப்புரத்தில் உள்ள பிரபல ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள் சனிக்கிழமை மூடப்பட்டன. அத்தியாவசியப் பொருள்கள் கடைகளைத் தவிா்த்து, பிற கடைகள், நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பயிற்சிக்குத் தடை....

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல் துறை பயிற்சி மைதானம், நடைபாதைப் பூங்கா பகுதிகளில் விளையாடுவதற்கும், நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும் மாா்ச் 20-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கு அறிவித்துள்ளதை வரவேற்று, லாரி உரிமையாளா்கள், காா் உள்ளிட்ட வாகன ஓட்டுநா்கள் வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com