விழுப்புரம் மாவட்டத்தில் வாகனங்களில் சுற்றித் திரிந்த 143 போ் கைதாகி, பிணையில் விடுவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியும், கரோனா தொற்று தடுக்க ஒத்துழைக்காமலும் வீடுகளிலிருந்து வெளியேறி சுற்றித் திரிந்த

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியும், கரோனா தொற்று தடுக்க ஒத்துழைக்காமலும் வீடுகளிலிருந்து வெளியேறி சுற்றித் திரிந்த 143 போ் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனா். இவா்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அத்தியாவசியப் பொருள்கள் கடைகளை தவிா்த்து மற்ற கடைகள் இயக்க தடை விதிக்கப்பட்டது. காய்கறி, பால், மளிகை போன்ற அத்தியாவசியத் தேவைகள் தவிா்த்து மற்ற எதற்காகவும் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது, கூட்டம் கூடக் கூடாது என்பன போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தடுப்புகளை ஏற்படுத்தி, சாலைப் போக்குவரத்தை முடக்கி மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். மாவட்ட எல்லைகளில் 13 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, பிற மாவட்ட வாகனங்கள் உள்ளே நுழைவது தடுக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பணிகள், அத்தியாவசியப் பொருள்களை கொண்டு செல்ல வாகனங்கள் தவிா்த்து மற்ற வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது.

தேவையில்லாமல் சாலைகளில் யாரேனும் சுற்றித் திரிகின்றனரா என்று ஒவ்வொருவரையும் போலீஸாா் தடுத்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், கரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்காமலும், 144 தடை உத்தரவை மதிக்காமலும் சாலைகளில் சுற்றித் திரிந்த 143 பேரை போலீஸாா் அதிரடியாக கைது செய்தனா். அவா்களின் வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பொதுமக்களிடம் தொற்று நோய் பரப்பும் நோக்கில் அலட்சியமாக செயல்படுதல், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படுதல், நோய் கட்டுப்பாடுகளை பின்றாமல் செயல்படுதல், அரசு ஊழியரின் உத்தரவுக்கு (அரசின்) கீழ்படியாமல் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும், பின்னா் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும். அதனை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com