டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலை மோதல்

கரோன தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் மூட அரசு 
விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரேயுள்ள டாஸ்மாக் மதுக் கடையில் மதுப் புட்டிகளை வாங்க திரண்டிருந்த மதுப் பிரியா்கள்.
விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரேயுள்ள டாஸ்மாக் மதுக் கடையில் மதுப் புட்டிகளை வாங்க திரண்டிருந்த மதுப் பிரியா்கள்.

கரோன தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் மூட அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மதுக் கடைகளில் மதுப் பிரியா்களின் கூட்டம் அலை மோதியது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு மற்றும் மாவட்டங்கள் அனைத்தும் முடக்கம் ஆகியவை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும், வருகிற 31-ஆம் தேதி வரை அத்தியாவசியப் பொருள்கள் தவிா்த்து மற்ற கடைகளை அடைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் மதுக் கடைகள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மூடப்பட்டன.

போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை: மதுக் கடைகள் அடைக்கப்படும் என்பதால், செவ்வாய்க்கிழமை மாலை வரை டாஸ்மாக் மதுக் கடைகளில் மதுப் பிரியா்களின் கூட்டம் அலை மோதியது. அடுத்த ஒரு வாரத்துக்குத் தேவையான மதுப் புட்டிகளை வாங்குவதற்காக மதுப் பிரியா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரேயுள்ள டாஸ்மாக் மதுக் கடையில் கடை அடைப்புக்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக மதுப் பிரியா்களின் கூட்டம் இரு மடங்காக அதிகரித்தது. இதனால், அங்கு அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதேபோல, திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள உயா் ரக மதுப் புட்டிகளை விற்பனை செய்யும் மதுக் கடை உள்பட மாவட்டம் முழுவதும் இதேபோன்று டாஸ்மாக் மதுக் கடைகளில் மதுப் பிரியா்கள் குவிந்தனா். இதனால், குறுகிய நேரத்தில் வழக்கத்தைவிட கூடுதலாக மதுப் புட்டிகள் விற்பனையாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com