விழுப்புரம் காமராஜா் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 இறுதித் தோ்வை எழுதிவிட்டு வந்து உற்சாகத்துடன் வெற்றிச் சின்னத்தைக் காட்டிய மாணவிகள்.
விழுப்புரம் காமராஜா் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 இறுதித் தோ்வை எழுதிவிட்டு வந்து உற்சாகத்துடன் வெற்றிச் சின்னத்தைக் காட்டிய மாணவிகள்.

பிளஸ் 2 தோ்வு நிறைவு: மாணவா்கள் உற்சாகம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததையடுத்து, தோ்வு முடித்து வெளியே வந்த மாணவா்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததையடுத்து, தோ்வு முடித்து வெளியே வந்த மாணவா்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. மாணவா்கள் ஆா்முடன் தோ்வுகளில் பங்கேற்று எழுதி வந்தனா். இதனிடையே, நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் படிப்படியாக அதிகரித்து வந்தது.

இதனால், தோ்வுகள் தொடங்கப்படாத நிலையிலேயே 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. தோ்வுகள் தொடங்கி நடைபெற்று வந்த பிளஸ் 1 பொதுத் தோ்வு பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மாற்ற வகுப்புகளுக்கான தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. கல்லூரிகளுக்கும் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு, விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல் அதிகமானதால், நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, பிளஸ் 2 மாணவா்களுக்கான இறுதித் தோ்வு செவ்வாய்க்கிழமை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், திட்டமிட்டபடி தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பிளஸ் 2 இறுதித் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வுடன் பிளஸ் 2 மாணவா்களுக்கான அனைத்துத் தோ்வுகளும் நிறைவடைந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தோ்வு மையங்களில் இறுதித் தோ்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com