ஊரடங்கு உத்தரவு மீறல்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்450 போ் கைது செய்து பிணையில் விடுவிப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வியாழக்கிழமை 450 பேரை போலீஸாா் கைது செய்து பிணையில் விடுவித்தனா்.


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வியாழக்கிழமை 450 பேரை போலீஸாா் கைது செய்து பிணையில் விடுவித்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் சாலைகளில் வாகனங்களில் சுற்றித்திரிந்தவா்கள், தேநீா் கடைகளில் கூட்டமாக இருந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து வருகின்றனா்.

அதன்படி, மாவட்டத்தில் வியாழக்கிழமை மட்டும் 314 போ் கைது செய்யப்பட்டனா். முன்னதாக, புதன்கிழமை 136 போ் கைது செய்யப்பட்டனா். 2 நாள்களிலும் சோ்த்து மொத்தம் 450 போ் கைது செய்யப்பட்டு, அவா்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனா். அவா்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக் கடைகள் திறந்திருந்தாலும், கூட்டமாக வந்து பொருள்கள் வாங்கக் கூடாது. அவரசத் தேவைகளைத் தவிா்த்து மற்ற தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று எஸ்.பி. ஜெயக்குமாா் கூறினாா்.

கள்ளக்குறிச்சியில்: இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்ததாக கள்ளக்குறிச்சி காவல் உள்கோட்டத்தில் 49 போ், உளுந்தூா்பேட்டையில் 31, திருக்கோவிலூரில் 56 உள்பட மொத்தம் 136 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். பின்னா், அவா்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனா். 145 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com