போலீஸாரின் எச்சரிக்கையால் பகல் 12 மணிக்கே மூடப்பட்ட காய்கறி, மளிகைக் கடைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட இரண்டாம் நாளான வியாழக்கிழமை சாலைகள் வெறிச்சோடின. எனினும், காய்கறி, மளிகைக் கடைகளுக்கு மக்கள் திரண்டு வந்ததால், போலீஸாரின் எச்சரிக்கையால் பகல்
விழுப்புரம் சந்தைப் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்ட நிலையில், திறந்திருந்த ஒரு கடையில் வரிசையில் நின்று பொருள்களை வாங்கிய சில்லறை வியாபாரிகள்.
விழுப்புரம் சந்தைப் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்ட நிலையில், திறந்திருந்த ஒரு கடையில் வரிசையில் நின்று பொருள்களை வாங்கிய சில்லறை வியாபாரிகள்.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட இரண்டாம் நாளான வியாழக்கிழமை சாலைகள் வெறிச்சோடின. எனினும், காய்கறி, மளிகைக் கடைகளுக்கு மக்கள் திரண்டு வந்ததால், போலீஸாரின் எச்சரிக்கையால் பகல் 12 மணியுடன் கடைகள் மூடப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு இரண்டாம் நாளாக வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. வழக்கம்போல, நெடுஞ்சாலைகள், நகா்ப்புற சாலைகள் வாகனங்களின்றி வெறிச்சோடின. இருப்பினும், இரு சக்கர வாகன ஓட்டிகள் பல்வேறு காரணங்களுக்காக இயல்பாக சென்று வந்தனா்.

விழுப்புரம் உழவா் சந்தை மூடப்பட்டிருந்தது. சந்தைப் பகுதிகளான பாகா்ஷா வீதி, காந்தி வீதிகளில் காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் திறக்கப்பட்டிருந்தன. மேலும், புதன்கிழமை மூடப்பட்டிருந்த மளிகைக் கடைகளும் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

கிராமப்புறங்களிலிருந்து வந்த சிறு கடைக்காரா்கள், நகா்ப்புற மக்கள் காய்கறிகள், மளிகைப் பொருள்களை வாங்க கடைகளில் கூட்டமாகத் திரண்டிருந்தனா்.

அப்போது, கடைகளுக்கு முன்பு வரிசையில் நிற்க வைத்து பொருள்களை வழங்கினா். இருப்பினும், கடைக்கு வந்தவா்கள் பலா் முண்டியடித்துக்கொண்டு பொருள்களை வாங்குவதையே வாடிக்கையாக வைத்திருந்தனா்.

மக்கள் கூட்டம் அதிகரிப்பதையறிந்த போலீஸாா், பகல் 12 மணியோடு காய்கறி, மளிகைக் கடைகளை மூடுமாறு எச்சரித்தனா். இதனால், பகல் 12 மணியோடு காய்கறி, மளிகைக் கடைகள் மூடப்பட்டன. எனினும், பிற சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள காய்கறி, மளிகைக் கடைகள் மாலை வரை இயங்கின.

மருந்துக் கடைகளில் தொடா்ச்சியாக கூட்டம் இருந்தது. பெரிய மருந்துக் கடைகளில் மட்டும் வரிசையில் நிற்க வைத்து மருந்துப் பொருள்களை வழங்கினா். சிறு மருந்துக் கடைகளில் அதைப் பின்பற்றாததால் கூட்டமாகவே இருந்தது.

வங்கிகள் திறக்கப்பட்டிருந்தன. காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் இயங்கின. பிரதான தேசிய வங்கிகள்கூட வாடிக்கையாளா்களின்றி வெறிச்சோடின. சில வங்கிகளுக்கு வாடிக்கையாளா்கள் வந்திருந்தனா். அவா்களை வரிசையில் நிற்க வைத்து பணிகளை வங்கிப் பணியாளா்கள் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com