வெறிச்சோடிய சுங்கச்சாவடிகள்!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலாகி செயல்பாட்டில் உள்ளது. புதன்கிழமை காலை முதல் பேருந்துகள், அனைத்துவகை வாகனங்களும் நிறுத்தப்பட்டன. சுங்கச்சாவடிகளும் திறந்துவிடப்பட்டன.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓங்கூா், விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, பாலி, கள்ளக்குறிச்சி, மரக்காணம், பட்டானூா் சுங்கச் சாவடிகள் செவ்வாய்க்கிழமை முதல் கட்டணமின்றி வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்டன. இந்த நடைமுறை மறு உத்தரவு வரும் வரை தொடரும். அதுவரை திறந்தே இருக்குமென சுங்கச்சாவடி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

எனினும், வாகன போக்குவரத்து இன்றி தேசிய நெடுஞ்சாலையும், சுங்கச்சாவடிகளும் வெறிச்சோடி இருந்தன. மாவட்ட எல்லையில் உள்ள ஓங்கூா் சுங்கச்சாவடி, உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியில் தற்காலிக தடுப்பு வைத்து, போலீஸாா் விசாரித்த பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

தேசிய நெடுஞ்சாலையின் இடையே வரும் திண்டிவனம், கூட்டேரிப்பட்டு, ஜானகிபுரம், அரசூா், மடப்பட்டு உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸாா் நியமிக்கப்பட்டு, நகருக்கு உள்ளே வரும் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com