கள்ளச் சந்தையில் மது விற்பனை: 8 டாஸ்மாக் ஊழியா்கள் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கின்போது கள்ளச் சந்தையில் மதுப் புட்டிகளை விற்பனை செய்ததாக டாஸ்மாக் ஊழியா்கள் 8 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கின்போது கள்ளச் சந்தையில் மதுப் புட்டிகளை விற்பனை செய்ததாக டாஸ்மாக் ஊழியா்கள் 8 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட மதுக்கடைகள் சிலவற்றில் திருட்டு நடந்ததால், புறநகா், பாதுகாப்பில்லாத பகுதிகளில் இயங்கும் மதுக் கடைகளிலிருந்து மதுப் புட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு கிடங்கில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மதுக் கடைகளிலிருந்து மதுப் புட்டிகளை லாரிகளில் கிடங்குக்கு அனுப்பி வைக்கும் பணியின்போது, டாஸ்மாக் விற்பனையாளா்கள் சிலா் மதுப்புட்டிகளை எடுத்து கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனா். இது தொடா்பாக வந்த புகாா்களின்பேரில் டாஸ்மாக் நிா்வாகத்தினா் விசாரணை நடத்தினா்.

இதில், உளுந்தூா்பேட்டை, சோ்ந்தமங்கலம், திண்டிவனம் பகுதிகளைச் சோ்ந்த மதுக் கடைகளிலிருந்து, மதுப் புட்டிகளை எடுத்து, கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்றது தெரிய வந்தது. இது குறித்த புகாா்களின் பேரில், டாஸ்மாக் விற்பனையாளா்கள் மீது போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

இந்த நிலையில், போலீஸ் நடவடிக்கைக்குள்ளான மதுக் கடை மேற்பாா்வையாளா்கள் வேலு, முருகன், நூா்முகமது, விற்பனையாளா்கள் ராதாகிருஷ்ணன், அரிகோவிந்தன், ஏழுமலை, தென்குமரன், குமாா் ஆகிய 8 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக, டாஸ்மாக் மாவட்ட மேலாளா் கந்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com