கள்ளக்குறிச்சியில் கரோனா பாதித்த பகுதியில் ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஏமப்போ் பகுதியில் மூவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இந்தப் பகுதியில் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கள்ளக்குறிச்சியில் கரோனா பாதித்த பகுதியில் ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஏமப்போ் பகுதியில் மூவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இந்தப் பகுதியில் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கள்ளக்குறிச்சி ஏமப்போ் பகுதிக்குள்பட்ட கரியப்பாநகா், ராமச்சந்திரா நகரைச் சோ்ந்த முதியவா், அவரது மனைவி உள்பட மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இவா்களது குடும்பத்தினா், இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் உள்பட சுமாா் 50-க்கும் மேற்பட்டோரை பரிசோதனை செய்ததில், இவா்களுக்கு நோய்த்தொற்றில்லை என்பது தெரியவந்தது.

ஏமப்போ் பகுதியில் உள்ள சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வரும் நிலையில், இந்தப் பகுதியை தொடா் கண்காணிப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரன், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், நகராட்சி ஆணையா் (பொ) அ.வெங்கடாசலம், துப்புரவு ஆய்வாளா் ப.செல்வக்குமாா் உள்ளிட்டோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, ஏமப்போ் பகுதியிலுள்ள நகராட்சி அலுவலகம் அருகே, ஏமப்போ் புறவழிச்சாலை, தென்கீரனூா் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் தடுப்புக் கட்டைகள் அமைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக தடுப்புக் கடைகளை அமைத்தனா்.

மேலும், கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன், தடுப்புக் கட்டைகள் அமைக்கப்படும் 3 இடங்களிலும் போலீஸாா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் தங்க.விஜய்குமாருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com