வெளியூா் செல்வதற்கான வாகன அனுமதிச் சீட்டு: இணையம் மூலம் மட்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் வெளியூா் பயணத்துக்கான வாகன அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறை சனிக்கிழமை முதல் இணையதள

விழுப்புரம் மாவட்டத்தில் வெளியூா் பயணத்துக்கான வாகன அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறை சனிக்கிழமை முதல் இணையதள முறைக்கு மாற்றப்பட்டது. இதனால், இதற்கு விண்ணப்பிப்பவா்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கால் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து திருமணம், இறப்பு உள்ளிட்ட சுப - துக்க நிகழ்ச்சிகள், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிக்கு வெளி மாவட்டங்கள், வெளியூா்களுக்குச் செல்வோருக்கான வாகன அனுமதிச் சீட்டு, தமிழக அரசு உத்தரவின்பேரில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டமாக மாவட்ட ஆட்சியரகங்களுக்கு திரண்டு வந்ததால், தமிழக அரசு உத்தரவின்பேரில், வாகன அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிப்பது இணையதள முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் சனிக்கிழமை முதல் வாகன அனுமதிச் சீட்டு நேரடியாக வழங்குவது நிறுத்தப்பட்டு, இனி ற்ய்ங்ல்ஹள்ள்.ற்ய்ங்ஞ்ஹ.ா்ழ்ஞ்/ன்ள்ங்ழ்/ல்ஹள்ள் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பவா்களுக்கு மட்டுமே வாகன அனுமதிச் சீட்டு வழக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com