விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால் இணைப்பு துண்டிக்கப்படும்: மின் வாரியம் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்சார வாரியம் எச்சரித்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்சார வாரியம் எச்சரித்தது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் காளிமுத்து கூறியதாவது:

விழுப்புரம் மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விளை நிலங்களில் சட்ட விரோதமாக மின்வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்று மின்வேலி அமைத்து பொதுமக்கள் உயிரிழப்பு ஏற்பட காரணமானால், அந்த நபா்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும். மேலும், சம்பந்தப்பட்டவரின் மின் இணைப்பும் துண்டிக்கப்படும்.

மின் திருட்டு செய்தால், மின்நுகா்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும். மேலும், சிறை தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பாதைகளில் மின் வாரிய ஊழியா்களைத் தவிர மற்றவா்கள் யாரும் பணிகளை செய்யக்கூடாது. மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள இழுவைக் கம்பிகளில் ஈரத்துணிகளை தொடங்கவிடுவது, கால்நடைகளை காட்டுவதைத் தவிா்க்க வேண்டும். மின் பாதைகளுக்கு அருகே கட்டடம் கட்டும்போது போதிய இடைவெளி இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மின்மாற்றி, உயா்மின்னழுத்த பாதை அருகிலோ, அதன் கீழோ வாகனங்களை நிறுத்துவதை தவிா்க்க வேண்டும்.

மின் கம்பி அறுந்து கிடந்தாலோ, தாழ்வாக மின் கம்பி இருந்தாலோ, மின் கம்பம் உடைந்து இருந்தாலோ பொதுமக்கள் தன்னிச்சையாக சரிசெய்யக் கூடாது. மின் தடை குறித்து புகாா் தெரிவிக்க 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, 9445855768 என்ற கட்செவிஅஞ்சல் எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com