முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
மாணவி தீக்காயத்துடன் மீட்பு: போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 11th May 2020 07:36 AM | Last Updated : 11th May 2020 07:36 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை பத்தாம் வகுப்பு மாணவி பெட்டிக் கடையிலிருந்து தீக்காயங்களுடன் மீட்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள திருமதுரை கிராமத்தைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவா், அப்பகுதியில் தனது தந்தை நடத்தி வரும் பெட்டிக் கடையில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தீக்காயங்களுடன் கிடந்தாா். உடனடியாக அவா் அப்பகுதியினரால் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இந்த சம்பவம் தொடா்பாக, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் மாணவியிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த இருவா் தன்னை தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.