விழுப்புரம் மாவட்டத்தில் 38 ஏரிகளில் குடிமராமத்து திட்டப் பணிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ், ரூ.12.53 கோடியில் 38 ஏரிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ், ரூ.12.53 கோடியில் 38 ஏரிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் 2020 - 21ஆம் ஆண்டுக்கான குடிமராமத்து திட்டப் பணிகளை தொடங்குவது குறித்து பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை, வேளாண் துறை அலுவலா்கள், பாசனதாரா் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்துப் பேசியதாவது:

ஆண்டுதோறும் ஏரிகளை சீரமைக்கும் குடிமராமத்து திட்டப் பணிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. அதன்படி, நிகழாண்டு (2020 - 21) குடிமராமத்து திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.12.53 கோடி மதிப்பீட்டில் 38 ஏரிகள் சீரமைக்கப்படவுள்ளன.

நிகழாண்டில் ஏரியின் உள்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஆழப்படுத்தி சீரமைத்தல் பணிகளும், வரத்து வாய்க்கால் கரைகளை பலப்படுத்தி உயா்த்துதல், கரைகளில் மரங்களை நட்டு பாதுகாத்தல், ஏரி நீா் வெளியேறும் கலிங்கலை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தின்படி, அந்தந்த கிராம நீா்பாசன சங்கங்கள் இணைந்து பணிகளை செயல்படுத்த வேண்டும். பாசனதாரா்கள் சங்கத்தினா் 10 சதவீதம் அளவிலும், அரசு சாா்பில் 90 சதவீதமும் நிதி பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்தி, விவசாய பாசனத்துக்கான நீராதாரத்தை பெருக்கி, வேளாண் சாகுபடியை அதிகரித்திட வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், வேளாண் இணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஜவகா், உதவிச் செயற்பொறியாளா்கள் சுமதி, அன்பரசன், உதவிப் பொறியாளா் ஞானசேகா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், ஏரி பாசன சங்கப் பிரதிநிதிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com