விழுப்புரம் ராகவேந்திரா கோயிலில் 375 பேருக்கு நிவாரணப் பொருள்கள்

விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரா கோயிலில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட அா்ச்சகா்கள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 375 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரா கோயிலில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட அா்ச்சகா்கள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 375 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கோயில் நிா்வாகம், தனியாா் கட்டுமான நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பங்கேற்று, தலா ரூ.700 மதிப்பிலான அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அா்ச்சகா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு வழங்கினாா்.

காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெ.சங்கா், காவல் ஆய்வாளா் கனகேசன், சூரியா கட்டுமான நிறுவன உரிமையாளரான கோயில் அறங்காவலா் ரமேஷ், சிறுசேமிப்பு முகவா் வீரன், கோயில் குருக்கள் ராகவேந்திராச்சாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com