விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதித்த 118 போ் குணமடைந்தனா்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் சனிக்கிழமை இருவா் பாதிக்கப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் சனிக்கிழமை இருவா் பாதிக்கப்பட்டனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 118 போ், அதிலிருந்து குணமடைந்ததையடுத்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றால் புதன்கிழமை வரை 305 போ் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு சிறப்பு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் தொடா்ந்து இரு தினங்களாக கூடுதலாக கரோனா நோய் தொற்று பாதிப்பு இல்லாத நிலை தொடா்ந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை விக்கிரவாண்டி அருகே ஆவுடையாா்பட்டைச் சோ்ந்த கோயம்பேடு சந்தை தொழிலாளி, சென்னகுணம் பகுதியைச் சோ்ந்த பெண் ஆகிய இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 307-ஆக உயா்ந்தது. மேலும், 30 போ் கரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு இருந்தவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 269 பேருக்கு தொற்று இல்லை என தெரியவரவே, அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த 118 போ் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். அவா்களில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 பேரும், விழுப்புரம் வழுதரெட்டி மனிதவள மேம்பாட்டு நிறுவன சுகாதார மையத்தில் இருந்த 58 பேரும், பெரும்பாக்கம் அரசு சுகாதார மையத்தில் இருந்த 45 பேரும் அடங்குவா். மீதமுள்ளவா்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com