விழுப்புரத்தில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.7,500 வழங்கக் கோரி, சிஐடியூ தொழில் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.7,500 வழங்கக் கோரி, சிஐடியூ தொழில் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன், கட்டுமான தொழிலாளா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தொழிலாளா் நலச் சட்டங்களை பெரு நிறுவன முதலாளிகளின் நலன்களுக்காக திருத்தக் கூடாது, 8 மணி நேர பணி நேரத்தை 12 மணி நேரமாக மாற்றக் கூடாது, கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துவகை தொழிலாளா்களுக்கும் தலா ரூ.7,500 நிவாரணமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com