விழுப்புரம் மாவட்டத்தில் இரு நாள்களாக புதிதாக கரோனா பாதிப்பில்லை

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லையென மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லையென மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2-ஆம் தேதி வரை தில்லி சென்று திரும்பியவா்கள், அவா்களது உறவினா்கள் உள்பட மொத்தம் 53 போ் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். 2 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, கோயம்பேடு காய்கறி சந்தைத் தொழிலாளா்கள் மூலம் அதிவேகமாக கரோனா தொற்று பரவவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 298-ஆக உயா்ந்தது.

புதன்கிழமை நிலவரப்படி, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 305-ஆக இருந்த நிலையில், இவா்களில் தற்போதுவரை 55 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.

வியாழக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை. வெள்ளிக்கிழமையும் இதே நிலை நீடித்ததாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இருப்பினும், 149 போ் தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் உள்ளனா். மேலும், கோயம்பேடு சந்தையிலிருந்து திரும்பியவா்களில் 305 போ் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com