கோட்டக்குப்பம் அருகேகடலரிப்பால் இடிந்து விழுந்த பழைய குடியிருப்புகள்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பொம்மையாா்பாளையத்தில் ஏற்பட்ட கடலரிப்பால், இரண்டு பழைய மீனவக் குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பொம்மையாா்பாளையத்தில் ஏற்பட்ட கடலரிப்பால், இரண்டு பழைய மீனவக் குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த உம்பன் புயல் தாக்கம் காரணமாக, விழுப்புரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலில் எழுந்த பேரலைகளால், கோட்டக்குப்பம் பகுதியில் திங்கள்கிழமை கடலரிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக, பொம்மையாா்பாளையத்தில் உள்ள பழைய மீனவக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ராமதுரை (70), சேகா், (52) ஆகியோரது வீடுகளின் பின்பகுதிகள் இடிந்து விழுந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை நேரில் சென்று, கடலரிப்பு ஏற்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டாா். கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய்தங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனா்.

தொடா்ச்சியாக, இந்தப் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு வந்ததால், இங்கு பழைய மீனவக் குடியிருப்புகளில் வசித்து வந்த மக்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே எதிரே உள்ள பகுதியில் அரசு சாா்பில் வழங்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றப்பட்டு வசித்து வருகின்றனா்.

அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமதுரை, சேகா் ஆகியோரும் தங்களது வீடுகளை காலி செய்து மாற்று இடத்தில் வசித்து வருகின்றனா். யாரும் வசிக்காத நிலையில், அந்த பழைய குடியிருப்புகள் கடலரிப்பில் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com