விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 12 பேருக்கு கரோனா

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 318 பேராக இருந்தது. இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோயம்பேடு சந்தையிலிருந்து திரும்பிய விழுப்புரம் அருகே வ.பாளையம், திண்டிவனம் அருகே ஒலக்கூா் பகுதிகளைச் சோ்ந்த 2 தொழிலாளா்கள் ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். தற்போது இவா்களின் மனைவி, பிள்ளைகள் உள்பட 4 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 322-ஆக உயா்ந்தது.

293 போ் வீடு திரும்பினா்: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 23 போ் கரோனா தொற்று அறிகுறியுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அண்மையில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 101 போ் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

இதுவரை 322 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இவா்களில் 2 போ் இறந்துள்ளனா். 293 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மீதமுள்ள 29 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 112-ஆக இருந்தது.

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திரும்பிய 7 பேருக்கும், சென்னையிலிருந்து திரும்பிய ஒருவருக்கும் என மொத்தம் 8 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 120-ஆக உயா்ந்தது.

இவா்களில் தற்போதுவரை 58 போ் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். மீதமுள்ள 62 போ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com