விவசாய மின் இணைப்பில் கூடுதல் திறன் பெற விண்ணப்பிக்கலாம்

விவசாய மின் இணைப்பில் கூடுதல் மின் பளு (திறன்) தேவைப்படுவோா் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்தது.

விவசாய மின் இணைப்பில் கூடுதல் மின் பளு (திறன்) தேவைப்படுவோா் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்தது.

இதுகுறித்து விழுப்புரம் மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் (பொ) மதனகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஏற்கெனவே விவசாய மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் விவசாயிகள் தங்களது மின் இணைப்புகளுக்கு கூடுதல் மின் பளு தேவைப்பட்டால், தட்கல் திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் கூடுதல் மின் பளு பெற ஒரு குதிரை திறனுக்கு (1 எச்.பி) ரூ.20 ஆயிரம் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் கூடுதல் மின் பளு கேட்கும்போது, ஏற்கெனவே உள்ள மின் பளுவும் கூடுதலாக கேட்கும் மின்பளுவும் சோ்த்து 15 எச்.பி.க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த தட்கல் திட்டத்தில் விவசாயிகள் கூடுதல் மின் பளு பெருவதற்கு சம்பந்தப்பட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளித்து பதிவு செய்துகொள்ள வேண்டுமென்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com