கரோனா: விழுப்புரம் மாவட்டத்தில்புதிதாக பாதிப்பில்லை

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
கரோனா: விழுப்புரம் மாவட்டத்தில்புதிதாக பாதிப்பில்லை

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா தொற்றால் 326 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். ஞாயிற்றுக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. மாவட்டத்தில் கரோனா தொற்றால் இருவா் ஏற்கெனவே உயிரிழந்தனா். 303 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் அரசு சிறப்பு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இவா்களைத் தவிர, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 142 போ் திண்டிவனம், விழுப்புரம், அரசூா் ஆகிய இடங்களில் உள்ள சிறப்பு பராமரிப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனா். வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு திரும்பியவா்கள் 921 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com