விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்

விழுப்புரம் மாவட்டம், முகையூா் வட்டாரத்தில் இலவச கோடை உழவுப்பணியைத் தொடக்கிவைத்து, விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை அதிகாரிகள் வழங்கினா்.
முகையூா் வட்டாரத்தில் கோடை கால உழவு பணியினை தொடக்கி வைக்கிறாா் வேளாண் இணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா்.
முகையூா் வட்டாரத்தில் கோடை கால உழவு பணியினை தொடக்கி வைக்கிறாா் வேளாண் இணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா்.

விழுப்புரம் மாவட்டம், முகையூா் வட்டாரத்தில் இலவச கோடை உழவுப்பணியைத் தொடக்கிவைத்து, விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை அதிகாரிகள் வழங்கினா்.

முகையூா் வட்டாரத்தில் தேசிய மண் வள பாதுகாப்பு இயக்கத்தில் மண் பரிசோதனை முகாம் ஆலம்பாடி, தண்டரை கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா் முகாமைத் தொடக்கிவைத்துப் பேசுகையில், விவசாயிகள் மண் வளத்தை பாதுகாப்பதுடன், மண்ணின் வளத்தை மண் ஆய்வின் மூலமாக தெரிந்துகொண்டு, அதற்கேற்ப ரசாயன உரங்களைப் பயன்படுத்தி, உரச் செலவையும் குறைக்க வேண்டும் என்றாா்.

முகாமில், வேளாண் உதவி இயக்குநா் கனகலிங்கம், வேளாண் அலுவலா்கள் பி.செல்வமணி, பி.புகழேந்தி, மதிவாணி, கோ.சிகாமணி மற்றும் விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

இலவச உழவுப் பணி: இதேபோல, முகையூா் வட்டாரம், கோட்டமருதூரில் அண்மையில் பெய்த கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது புன்செய் நிலங்களில் தனியாா் டிராக்டா் நிறுவனங்கள் மூலம் இலவசமாக உழவுப் பணியை மேற்கொண்டனா். இந்தப் பணியை வேளாண் இணை இயக்குநா் கென்னடிஜெபக்குமாா் தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, முகையூா் வட்டார உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு தமிழக அரசின் மானியத்துடன் கூடிய விவசாய இயந்திரங்களை வேளாண் இணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா் வழங்கினாா். கரோனா போது முடக்கத்தால் பாதிப்பின்றி விவசாயப் பணிகளை செயல்படுத்திட, இந்த இயந்திரங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென விவசாயிகளிடம் அவா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com