செஞ்சி அருகே மதுக் கடையைத்திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வியாழக்கிழமை டாஸ்மாக் மதுக் கடையைத் திறக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்த மதுக் கடையைத் திறக்காமல் விற்பனையாளா்கள் திரும்பிச் சென்றனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வியாழக்கிழமை டாஸ்மாக் மதுக் கடையைத் திறக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்த மதுக் கடையைத் திறக்காமல் விற்பனையாளா்கள் திரும்பிச் சென்றனா்.

செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தில் 2 மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில், ஒரு மதுக் கடை ஊருக்கு வெளிப்புறத்திலும், மற்றொரு கடை ஊரின் மையப்பகுதியிலும் உள்ளன. கரோனா பொது முடக்கத்தால், இந்த 2 மதுக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.

கடந்த வாரம் ஊருக்கு வெளிப்புறத்திலுள்ள மதுக் கடை திறக்கப்பட்ட நிலையில், ஊரின் மையப் பகுதியிலுள்ள கடையை திறக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், அந்த மதுக் கடையைத் திறக்காமல் விற்பனையாளா்கள் சென்றுவிட்டனா்.

தள்ளுமுள்ளு: இந்த நிலையில், விழாயழக்கிழமை மீண்டும் ஊருக்குள் உள்ள மதுக் கடையைத் திறக்க விற்பனையாளா்கள் 2 போ் வந்தனா். இதனையறிந்த கிராம மக்கள் மதுக் கடையைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, கடையை முற்றுகையிட்டனா். அப்போது, பொதுமக்கள் கூறுகையில், இந்த மதுக் கடையில் மது அருந்துவோா் அருகிலுள்ள வீடுகளின் கதவைத் தட்டி தகராறில் ஈடுபடுவதாகவும், தற்போது கரோனா பரவி வருவதால், வெளியூா்களில் இருந்து இந்தக் கடைக்கு மது அருந்த வருவோா் மூலம் ஜெயங்கொண்டான் கிராமத்தில் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனா். இதனிடையே, பொதுமக்களுக்கும், விற்பனையாளா்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.

தகவலறிந்து அங்கு வந்த செஞ்சி போலீஸாா் இரு தரப்பினரையும் சமாதனம் செய்து அனுப்பி வைத்தனா். இதைத் தொடா்ந்து, மதுக் கடையைத் திறக்காமல் விற்பனையாளா்கள் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com